ஈசன் தன்னை அடைய வழி செய்யும் வகையில் மாயத்தை படைத்தான், என்னும் உண்மையை உணர்ந்தால் பின் எல்லாம் சிவமயமாகுமே !! சிவாய சிவ சிவ !!

அழியும் உடலுடன் சேர்ந்து அழியும் சிற்றின்பங்களை வேறுத்தேன்
நிலை இல்ல துன்பங்களை கண்டு கலங்க மறுத்தேன்
விருப்பு வெறுப்பு இன்றி கண்டோரை யெல்லாம் காதலிக்க நேர்ந்தேன்
காலை மாலை உன்னை எண்ணி தியானத்தில் அமர்ந்தேன்
இனி என் செய்வேன் ஈசனே, ஆட்கொல் உடனே !!

சிறப்புப் பாயிரம்:: நேரிசை ஆசிரியப்பா::

பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக்
காண்டல் செல்லாக் கண்போல் ஈண்டிய
பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் இருள்தீர்ந்து
அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி
மயர்வுஅற நந்தி முனிகணத்து அளித்த
உயர்சிவ ஞான போதம் உரைத்தோன்
பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன்
பொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவன்
பவநனி வன்பகை கடந்த
தவரடி புனைந்த தலைமை யோனே.


சிவன் மும்மூர்த்திகளுள் ஒருவர். முதல்வனும் என்றும், மூவரும் அவனே என்றும், மூவரும் அறியாதவர் என்னும் மிக பெரிய தத்துவத்தை சைவ சித்தாந்தம் கூறுகிறது. சிவனை வழிபட்டரோகள் உமா தேவி, உருத்திரன், திருமால், பிரமன், பிள்ளையார், முருகன், தேவர் முதல் இராவணன் வரை. எல்லோரும் அவன் அடிமை. சிவன் உருவாய் (நடராசன்), அருருவாய் (சிவலிங்கம்), அல்லுருவாய் நமக்கு காட்சி அளிக்கிறார். சிவன்னுக்கு பிறப்பு இறப்பு இல்லை. இருவினையும் இல்லை.

திருச்சிற்றம்பலம்...


தட்சிணாமூர்த்தி

கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை ஆறு
அங்கம் முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைத்து பவத் தொடக்கை வெல்லாம்.


தந்தை தாயாவானும் சார்கதியிங் காவானும்

அந்தமிலா இன்பம் நமக்காவானும்- எந்தமுயிர்

தானாகுவானும் சரணாகுவானும் அருட்

கோனாகுவானும் குரு


தென்னாடுடைய சிவனே போற்றி!!!!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!!!

பேசாதே மௌனம் என்ற பிரம்ம வித்தை பிடரி வழி கண் திறந்து பிரகாசிக்கும் பூசார வஸ்த்து உப்பு வன்னி பீஜம் புதைத்த இடத்தை காட்ட பொருளும் சேரும்கேசாதி பாதம் முதல் நடுவும் தோறும் கெவுணம் என்ற குளிகை யாத கிடைக்கும் பாரே

செயல் அற்று இருப்பார் சிவ வேடத்தாரே!!!

செயல் அற்று இருப்பது என்பது சும்மா சோம்பியிருப்பது அல்ல. "எல்லாம் அவன் செயல், ஆட்டுவிப்பவன் அவன்- இயங்குவது நான்' என்ற நிலை..


சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
என்ற சலனமற்று இருந்திடுவோம்!


திருச்சிற்றம்பலம்....


{தேவாரம் ஓதுவதற்கு முன் திருச்சிற்றம்பலம் என்று சொல்லி விட்டுத் தொடங்குவது மரபு. காரணம் இந்த சிதம்பர புண்ணிஸ்தலம் தான் சைவத் திருமுறைகளைப் பாதுகாத்து உபசரித்து வந்துள்ளது. இது இசை உலகிற்கே பிறப்பிடம். அதனால் தான் திருமுறை ஓதுபவர்கள் ஆரம்பத்திலும் முடிவிலும் திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள்}


சிற்றம்பலத்தில் கூத்தாடுவதற்காக உயர்த்தப்பட்ட சிவபெருமானுடைய இடது திருவடியன்றோ நம்மை அடிமையாகக் கொண்டதாகும்...

ஒலி என்பது ஆற்றலின் ஒரு வகை. மாண்டூக்கிய உபநிஷத் ஒலியால் பிரபஞ்சம் தோன்றியது என்கிறது. பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளின் உள்ளும் ஒலி நிறைந்திருக்கிறது. சங்கை எடுத்து காதில் வைத்து பார்த்தால் ஒருவித ஒலி கேட்கும். கடல் அலைகளில் ஒலி உண்டு. நமது ஸ்வாசத்திற்கும் ஒலி உண்டு.


அதனால் தான் இறைவனை 'நாதப்பிரம்மம்' என்கிறார்கள். மத சடங்குகள் செய்யும் பொழுது எல்லா மதத்திலும் கடவுளின் நாமத்தை உச்சரிக்கும் தன்மை செய்கிறார்கள்.





அற்ற சிவயோகிக்கு அருஞ்சின்னம் மூன்றுண்டு பற்றலகை; உன்மத்தர்; பாலரியல்...


ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...

அவன் அன்றி இவன் இல்லை.. அவனே வழியும்.. அவனே அனைத்தும்.. பின் இவன் அவன் பதம் அடையும் வரை அவன்/உன் பாதம் பற்றி இருக்க அருள்வாய் அப்பனே...சிவாய சிவா சிவா..

சிவாய சிவா சிவா...

சிவனே சரணம்.. இன்றைய ஆடம் ஆரம்பம்.. அருள்வாயாக!!!

"நமசிவாய" என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூல மந்திரம். சிவம் என்றால் மங்களம் என்று பொருள். யசுர் வேதத்தின் நடு நாயகமானது ஸ்ரீருத்திரம். அதன் நடுநாயகமே "நமசிவாய"...

நமசிவாய...சிவாயநம....சிவ..சிவ...

கூடல் இலங்கு குருமணி போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி

சிவாய சிவ சிவ...சிவாய சிவ சிவ...சிவாய சிவ சிவ...சிவாய சிவ சிவ...சிவாய சிவ சிவ...சிவாய சிவ சிவ...சிவாய சிவ சிவ...சிவாய சிவ சிவ...சிவாய சிவ சிவ...சிவாய சிவ சிவ...சிவாய சிவ சிவ

மேல், ``அண்ட முதலான்`` எனக் குறிக்கப்பட்ட, அனைத்துலகிற்கும் முதல்வனாகிய சிவபெருமான், முன்னாளில், மேல்நிலையினின்றும் இறங்கி, என் வினைக்கேற்ற வகைகளாகத் தனது உண்மை நிலையை மாற்றிக்கொண்டு, கீழ்நிலையில் நின்ற தனது சத்தியை எனக்குப் பெருங்காவலாக அமைத்து நடாத்தித் தனது ஒப்பற்ற தனிப் பேரின்பத்தைத் தரும் அருள் நோக்கத்தை இன்று எனக்கு அளித்து, என் உள்ளத்தில் நீங்காது நின்று, அதனை அன்பி னால் கசிந்து கசிந்து உருகப்பண்ணி, என
து மலம் முழுவதையும் பற்றற நீக்கினான்.~திருமந்திரம்


ஓம் நமசிவாய..
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..


நமச்சிவாயா வாஅழ்க

நாம் வாழும் வீட்டை நாம் வெள்ளையடிப்பது வீடு வாழ வேண்டும் என்பதற்காக அல்ல நாம் அதில் வாழ வேண்டும் என்று தான்."வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான்" (திருச்சதகம் 16)என்று மாணிக்க வாசகர் கூறிப்பிட்டுள்ளார்.
நாம் வாழ வேண்டும் என்ற பலனுக்காகவே இறைவனை வாழ்த்துகிறோம். இது தான் நான் சொல்ல வருவது.

குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மகேஷ்வரக, குரு ஷாட்ஸாத் பரம்பிரம்மம் தஸ்மை ஸ்ரீ குருவே நமக



புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்....

தென்னாடுடைய சிவனே போற்றி...நானும் அங்கு வந்தடைய அருள்வாய் போற்றி!!


The famous 'jambukeshwarar' in 'thiruvaanaikaval' temple tiruchy.
MYTHOLOGY:
Long time ago the place was a jungle where an elephant and a spider was worshiping the Lord Siva under the Jambu Tree. The elephant was cleaning the statue of Siva with water and put some flower under him every day. At the same time the spider made a web over the Siva statue for shadow. The elephant always clean the spider's web because it thought it is dust. The spider was curious to know who ruined its web.
One day the spider waited to see who is that. The elephant came and clean the web by showering the water on Lord Siva. The spider got angry and get into the elephant's trunk. Both died and went to the heaven. Over there Lord Siva gave them an eternal lift of "Motcham".
The spider got a rebirth as a king. The king name was Kotchengannan cholan means red eyed king.There was a story behind the kings red eyes, when he was in his mother's womb the kingdom astrologer predicted a time to give birth. If she gives birth that time he would be a wise king and rule the kingdom very well. when the queen got the labor pain the time was to early. The queen told the servant to hang her upside down for the time to come. so the waiting time made a the baby's eyes red.
After his birth and became the king and he build the temple for Lord Siva and Goddess Akilandeswari in the name of Aanaikka (elephant protected) later days it changed to Thiruvanaikovil.
The Siva sannathi was made very small to keep the elephant away from the god.



In the Thillai forests resided a group of saints or 'rishis' who believed in the supremacy of magic and that God can be controlled by rituals and 'mantras' or magical words. The Lord strolls in the forest with resplendent beauty and brilliance, assuming the form of 'Pitchatanadar', a simple mendicant seeking alms. He is followed by His Grace and consort who is Lord Vishnu as Mohini. The rishis and their wives are enchanted by the brilliance and the beauty of the handsome mendicant and His consort.
On seeing their womenfolk enchanted, the rishis get enraged and invoke scores of 'serpents' by performing magical rituals. The Lord as the mendicant lifts the serpents and dons them as ornaments on His matted locks, neck and waist. Further enraged, the rishis invoke a fierce tiger, which the Lord skins and dons as a shawl around His waist.
Thoroughly frustrated, the rishis gather all their spiritual strength and invoke a powerful demon Muyalakan - a symbol of complete arrogance and ignorance. The Lord wearing a gentle smile, steps on the demon's back, immobilizes him and performs the Ánanda Thaandava (the dance of eternal bliss) and discloses His true form. The rishis surrender, realizing that this Lord is the truth and He is beyond magic and rituals.


The Navratri celebrations are devoted to the worship of the Eternal mother, which has its origins in the Vedas. Durga is also considered to be a combination of the Trinity of goddesses. They are Saraswati, Parvati, and Lakshmi. During Navratri, these three main goddesses are worshipped as well. The central theme of Navratri though is the triumph of good over evil.
1st — 3rd days: The first three days are dedicated solely to the worship of the goddess Durga. During this period, her energy and power are worshipped. Each day is dedicated to a different manifestation of Durga. On the first day, Kumari is worshipped, which signifies the girl child. The second day is dedicated to Parvati, who is the embodiment of a young woman. On the third day, Kali is worshipped. This form represents the woman who has reached maturity.


தாயே.. ஏமாற்றங்கள் போதும்.. கர்மங்கள் போதும்.. கிழித்து எறி மாயயை, அழைத்து செல் ஈசனிடம்... ஓம் ஹ்ரீம் !!

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை
யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி
வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய
போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்
கண்டுகொள்ளே.

பொருள் விளக்கம்: எல்லாவற்றையும் உடையவனே! உனது, மணம் நிறைந்த திருவடியைப் பெறுதற்கு என் உடல் புளகித்து, நடுநடுங்கி கைகளைத் தலைமேல் வைத்து, கண்களில் நீர் வடிந்து, மனம் புழுங்கி, பொய்நீங்கி, உன்னைக் குறித்து வணங்கித் துதிக்கின்ற ஒழுக்கத்தை நான் தளர விட மாட்டேன். ஆதலால் எனது நிலைமையை, நீ நோக்கி உன் அடியாருள் ஒருவனாக ஏற்றுக் கொள்வாயாக!

பால் நினைந்து ஊட்டும் தாயின் கருணை போன்றவன் ஈசன் !!



போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.


மாயப் பிறப்பறுக்கும் சிவபெருமானே !! உன்னை தினம் தினம் தொழுது நிற்கும் என்னை கண்டு கொள் !! சிவாய சிவ சிவ சிவாய சிவ சிவ சிவாய சிவ சிவ !!


கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே.


பொருள் விளக்கம்: யாவரேனும் எலும்புக் கூட்டைத் தோளிலே கொள்ளும் சிவபெருமான் பூசுவதும், அணிந்தோர் யாவர்க்கும் கவசமாய் நிற்பதும் ஆகிய திருநீற்றை அதன் வெள்ளொளி மிக விளங் குமாறு பூசி மகிழ்ச்சியுறுவராயின், அவரிடத்து வினைகள் தங்கியிரா. சிவகதி கூடும். சிவனது அழகிய திருவடியையும் அவர் அடைவர்.



ஓடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடங்கொண் டென்செய்வீர்? வேண்டா மனிதரே
நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்
தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே.

பொருள் விளக்கம்: மனிதர்காள், வேடமாத்திரத்தைக் கொண்டு என்ன செய்யப்போகிறீர்! அந்த நிலை வேண்டுவதில்லை. ஓடுகின்ற குதிரை போல உள்ள பிராணவாயுவை அதன் கடிவாளத்தை இறுகப் பிடித்து ஓட்டுதல் போல இரேசக பூரக கும்பக முறைகளை ஒழுங்காகக் கடைப் பிடித்தலால் அடக்குங்குள் அதனால், மனம் உம் வசப்பட, அது கொண்டு நம் பெருமானாகிய சிவபெருமானை அடைய விரும் புங்கள். அவ்விருப்பம் நிறைவுறுதற்குரிய வழியில் செல்லுங்கள். பின்பு பேரின்பப் பொருளாகிய முதற்பொருளைச் சென்று அடையலாம்.



நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து
தேங்காக் கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம் ?
தேங்காக் கருணைவெள்ளம் தேக்கியிருந்து உண்பதற்கு வாங்காமல் விட்டகுறை வந்தெடுப்பது எக்காலம் ?


துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந் திராதே
அஞ்செழுத் தோதின் நாளும் அரனடிக் கன்ப தாகும்
வஞ்சனைப் பால்சோ றாக்கி வழக்கிலா அமணர் தந்த
நஞ்சமு தாக்கு வித்தார் நனிபள்ளி அடிக ளாரே.



அருணா சலமென வகமே நினைப்பவ
ரகத்தைவே ரறுப்பா யருணாச்சலா


சக்தி சிவம் விளையாட்டா லுயிராக்கி
ஒத்த விருமாயாக் கூட்டத் திடையூட்டிச்
சுத்த மதாகத் துரியம் பிரிவித்துச்
சித்தம் புகுந்து சிவமய மாக்குமே !!

ஈசன் தன்னை அடைய வழி செய்யும் வகையில் மாயத்தை படைத்தான்,
என்னும் உண்மையை உணர்ந்தால் பின் எல்லாம் சிவமயமாகுமே !! சிவாய சிவ சிவ !!

ஷிவாய ருத்ராய ஷிவார்சிதாய மஹானுபாவாய மஹேஷ்வராய .
ஸோமாய ஸூக்ஷ்மாய ஸுரேஷ்வராய ஷோணாத்ரிநாதாய நம:ஷிவாய ..

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே...

திருநீறு
-----------

திருநீறு இந்துசமயத்தின் சிறந்த பிரசாதங்களில் முதன்மைவகிப்பதாகும். இது சமயத்தின் தோற்ற ஒழுக்க முறையுண்மைகளும் கிராமததுவங்கட்கும், முப்பொருள் உண்மைக்கும் அறிகுறியாய் அமைவது. மூன்று விரல்களால் இடப்படும் திருநீற்றின் மூன்று கோடுகளும் சிந்தனை , சொல், செயல் என்ற திரிசத்தியங்களைக் கூறுகின்றது. முடிவில் யாவரும் சாம்பல் ஆவர் என்ற நிலையான உண்மையை திருநீறு உணர்த்துகின்றது. மேலும் தூய்மையும் வெண்மையுமான நீறு போல் நமது உள்ளம் தூய்மையாகவும் ஞான ஒளி உடையதுமாக இருத்தல் வேண்டும் என்பதையும் காட்டுகின்றது.
பசுவின் (ஜீவனின்) மலமாம் ஆணவம், கன்மம், மாயை என்ற தீயில் (ஞானத்தீயில்) நீறுகின்றன என்ற தத்துவத்தையும் இது வெளிப்படுத்துகின்றது. இதை ஒட்டியே சம்பந்தபெருமாள்...

விறகிடை மூடி அழல்கோடு போட
வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீரும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே !!

ஜகன்னிவாஸாய ஜகத்திதாய ஸேனானிநாதாய ஜயப்ரதாய .
பூர்ணாய புண்யாய புராதனாய ஷோணாத்ரிநாதாய நம:ஷிவாய ..



ஈசன் அருள் அறிவார் இல்லை....
சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன்...

பொருள் விளக்கம்: அரித்தல் மிக்க இருவினையால் தாக்குண்டு எரிசூழ ( இடுகாட்டில் ) கிடந்தார் என்று அயலோர் சிரிப்புற்றுப் பலபல பேசுதலை அடையுமுன்னரே நீவிர்போய்த் திருச்சிற்றம்பலத்தை அடைந்து உய்மின்

அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.

உலக வாழ்கை ஒரு புறம் புரியவில்லை மறு புறம் என்ன பெத்த அப்பன் சிவனிடம் எப்படி திரும்பி போவது என்று புரியலையே


பொருள் விளக்கம்: ரமணர் கூறுவது போல் “நான் யார்?” என்ற கேள்வி கேட்கப்படும் பக்குவம் அடைவது எக்காலம்? அதற்கான விடையாகிய தன்னை அறியும் அறிவு வருவதும் எக்காலம்? அதாவது தத்துவ விசாரணை செய்து கொண்டேபோய் விசாரணை முடிவில் ஆன்மதரிசனம் அடைவது எக்காலம


ஆர் என்று கேட்டதுவும் அறிவு வந்து கண்டதுவும்
பார் என்று சொன்னதுவும் பகுத்தறிவது எக்காலம்?

காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
தூதென் றெண்ணாமற் ககமென்று நாடுமித் துர்ப்புத்தியை
ஏதென் றெடுத்துரைப்பேன்? இறைவா, கச்சியேகம்பனே.

முதல் மலை பிரணவ சொரூபம் வெள்ளிவிநாயகர் உறைவிடம்
இரண்டாம் மலை சுவாதிஷ்டானம் பாம்பாட்டிச் சுனை
மூன்றாம் மலை மணிப்பூரகம் அக்னிஅம்சம், கைதட்டிச்சுனை
நான்காம் மலை அநாகதம் ஒட்டர் சித்தர் சமாதி உள்ள இடம்
ஐந்தாம் மலை விசுக்தி நிலை பீமன் களியுருண்டை மலை
ஆறாம் மலை ஆக்ஞை நிலை சேத்திழைக்குகை, ஆண்டி சுனை
ஏழாவது மலை சஹஸ்ரஹாரம் சுயம்புலிங்கம், (வெள்ளியங்கிரிஆண்டவர்)


சக்தி வாய்ந்த இந்த வெள்ளயங்கிரி(தென் கைலாயம்) ஈசனை நினைத்து இருந்தால் முக்தி நிச்சயம் !!

தென்னாடு உடைய சிவனே போற்றி
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

வின்னாடவரும் மன்னவரும் பணியும்
வெள்ளியங்கிரி திரியனே போற்றி! போற்றி!! போற்றி!!!

,
மெய்கலந் தாரோடு மெய்கலந் தான் தன்னை
பொய்கலந் தார்முன் புகுதா வொருவனை
நான் மறவேனே !!

விண்ணில் (பர ஆகாயத்தில்) இருந்து இறங்கி, ஒவ்வொரு உயர்களின் வினையின் தன்மை அறிந்து அதற்கு தங்குந்தாற்போல் உடல் கொண்டு, தன் திருவடியை உயிர் பாதுகாவலனாகத் தந்து, உடல் உள்ளே நின்று ஒப்பிலா ஆனந்த கண் என்னும் ஞானக் கண்ணின் வழியாக பாசத்தை (காலம், கன்மம்,மாயா) அகற்றி அருளினானே